BREAKNG : டி20 உலக கோப்பைக்கு ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி தேர்வு.! - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பையில் இருந்து பும்ரா விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக முகமது ஷமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

20 ஓவர் உலக கோப்பை வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

இதில், ரோஹித் சர்மா தலைமையிலான 14 பேர் கொண்ட இந்திய அணி  ஆஸ்திரேலியா சென்று தீவிர வலைப்பயிற்சி மற்றும் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மேலும் காத்திருப்போர் பட்டியல் வீரர்களில் தீபக் சஹர் விலகியுள்ள நிலையில் ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி;

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஸர் படேல், ஹர்ஸல் படேல், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங். முகமது ஷமி.

காத்திருப்பு பட்டியல் வீரர்கள் : முகமது சிராஜ், ரவி பிஷ்னோய், ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

T20 World Cup Mohammed Shami replaced Jaspreet bumrah


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->