சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் சாய் சுதர்சன்! - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில், இந்திய அணிக்காக களமிறங்குகிறார் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன்!

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என சமன் செய்துள்ளது.

இந்நிலையில், இன்று இரு அணிகளுக்கு இடையேயான 3 ஆட்டங்கள் கொண்டஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடல் தொடஙிகியுள்ளது.

முதல் ஆட்டம் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று பிற்பகல் பிற்பகல் 1.30 மணிக்கு தொடக்கி நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

கே.எல்.ராகுல் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியை பொறுத்தவரை இளம் வீரர்களே அதிகம் இடம் பெற்றுள்ளனர். தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்சன் ஆகியோர் களமிறக்கப்படுவார்கள்.

தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் இன்றைய ஆட்டத்தின் மூலம் சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகமாகிறார். இதேபோல் நீண்ட நாட்களுக்கு பின் சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sai Sudharsan SAvsIND


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->