இந்திய அணியில் அறிமுகமான அதிரடி பேட்ஸ்மேன்.. யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


இந்தியா இலங்கை அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது.

இதில், முதலில் நடைபெறும் டி20 தொடருக்கு இந்திய அணியில் ரோகித் சர்மா, கோலி, ராகுல் ஆகிய மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஹார்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாடுகிறது.

இதில், நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி கடைசி வரை போராடி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு புனேவில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் இன்றைய போட்டியில் அதிரடி பேட்ஸ்மனான ராகுல் திரிபாதி டி20 சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rahul Tripathi make debut in T20 international


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->