#IPL2022 : இறுதிப் போட்டிக்கு முன்னேற போவது யார்.. டாஸ் வென்ற குஜராத் அணி பவுலிங் தேர்வு.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் குவாலியர் 1-ல் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

10 அணிகள் பங்கேற்ற நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய 4 அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

15வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் புனே நகரங்களில் நடைபெற்றது. கடந்த மார்ச் 26ம் தேதி தொடங்கிய லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. அதனைத்தொடர்ந்து ப்ளே ஆப் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இன்று  கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறும் முதல் தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் பாண்டியா பௌலிங் தேர்வு செய்துள்ளார். இதில் வெற்றி பெறும் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் :
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(w/c), தேவ்தத் பாடிக்கல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், ஓபேட் மெக்காய்.

குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் : விருத்திமான் சாஹா(w), ஷுப்மான் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா(c), டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப், முகமது ஷமி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Qualifier 1 Gujarat Titans won the toss choose to bowl


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->