புரோ கபடி லீக் :  அரையிறுதியில் தமிழ் தலைவாஸ் அணி அதிர்ச்சி தோல்வி.! - Seithipunal
Seithipunal


புரோ கபடி லீக் 9வது சீசன் போட்டி கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது. இதில், மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின.

லீக் போட்டிகளின் முடிவில் முதல் இடங்களை பிடித்த ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (82 புள்ளிகள்), புனேரி பால்டன் (80 புள்ளிகள்) ஆகிய 2 அணிகளும் நேரடியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து நாக்-அவுட்  சுற்று போட்டிகள் மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் பெங்களூரு புல்ஸ்- தபாங் டெல்லி அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 56-24 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை தோற்கடித்தது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 2வது நாக் அவுட் சுற்று போட்டியில் தமிழ் தலைவாஸ்- உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின. இதில்  36-36 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இதனையடுத்து டை பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது.

இதில், தமிழ் தலைவாஸ் அணி 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் யுபி யோத்தாவை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.

இதனையடுத்து நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பான்தர்ஸ் - பெங்களூர் புல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 49-29 என்ற புள்ளி கணக்கில்  வெற்றி பெற்று ஜெய்ப்பூர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி - புனே உடன் மோதியது. இந்த போட்டியில் 39-37 என்ற புள்ளிகள் கணக்கில் புனே அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pro kabaddi league 9 semifinal Puneri Paltan won against Tamil Thalaivas


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->