T20 உலக கோப்பை நாயகனுக்கு கொரோனா..! அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான அஃப்ரிடி தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அதுபோல பாகிஸ்தானிலும் மிக வேகமாக பரவிவருகின்றது. இதுவரை பாகிஸ்தானில் 1.3 லட்சம் பேர் இந்த வைரஸ் தாக்கத்திற்கு ஆளாகி இருக்கும் நிலையில், 2500 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 

இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் கிரிக்கெட் வீரரான சாகித் அப்ரிடி கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றார். இதனை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மூலமாக உறுதிப்படுத்தி இருக்கின்றார். அவரது ட்வீட்டர் பக்கத்தில், "எனக்கு வியாழக்கிழமை முதல் உடல்நிலை சரியில்லை. உடல் மிகவும் வலித்தது. எனவே, நான் கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது." என்று தெரிவித்துள்ளார். 

இதனைக்கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து அவர் மீண்டு வரவேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்பதாக கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.

இவர், 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக பாகிஸ்தான் கோப்பையை கைப்பற்றிய இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெற்ற T20 உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி, 'ஆட்டநாயகன்' விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pakisthan player affected by corona


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->