இந்தியாவில் நியூசிலாந்துக்கு தொடரும் சோதனைகள்..! 30 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டம்.. அசத்தும் இந்திய அணி.!! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3-டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டிகளில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்று, நியூசிலாந்து அணியை இந்தியா அணி வீழ்த்தியது. 

இதையடுத்து, நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முதல் டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி போராடி டிரா செய்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற முனைப்பில் இரு அணிகளும் களமிறங்கியது.  

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியுள்ளது. இதன் மூலம் இந்திய அணி 372 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. மேலும், இந்த டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது.

1988ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் நடந்த எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதில்லை. மேலும் 1955 - 56 முதல் இதுவரை இந்தியாவில் 12 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ள நியூஸிலாந்து அணி, ஒருமுறைகூட தொடரை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new zealand team not won a test series since 1955 in india


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->