#NZvsNED || கத்துக்குட்டியிடம் திணறும் நியூஸிலாந்து! டாஸ் வென்ற நெதர்லாந்து பந்து வீச்சு! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தொடங்கியுள்ள 2023ம் ஆண்டிற்கான உலகக் கோப்பை தொடரின் 6வது போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் தங்களின் இரண்டாவது போட்டியில் மோதுகின்றன. முதல் போட்டியில் இங்கிலாந்து பணியை வீழ்த்திய உத்வேகத்தோடு நியூசிலாந்து இன்று களம் இறங்கியுள்ளது.

அதேசமயம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த நெதர்லாந்து அணி வெற்றி பெற வேண்டும் என முனைப்போடு இன்று களம் காண்கிறது. ஆனால் போட்டியிலும் நெதர்லாந்து வெற்றிக்கனியை பறிப்பது அவ்வளவு எளிதல்ல.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 

நியூஸிலாந்து அணி:

டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட்

நெதர்லாந்து அணி:

விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், கொலின் அக்கர்மன், பாஸ் டி லீட், தேஜா நிடமனூரு, ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ரியான் க்ளீன், ஆர்யன் தத், பால் வான் மீகெரென்.

தற்போது வரை ஐந்து ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை சேர்த்துள்ளது. முதல் மூன்று போர்களை சிறப்பாக வீசிய நெதர்லாந்து வீரர்கள் ரன் ஏதும் விட்டுக் கொடுக்காமல் மேட்இன் ஓவர் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Netherland won the toss elected bowl against NewZealand


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->