#IPL2023 : மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஜாஸ்பிரித் பும்ரா விலகல்.. மாற்று வீரர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜாஸ்பிரித் பும்ரா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகி விளையாடாமல் சிகிச்சை பெற்று வந்தார்.

அதன் காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் விளையாடாவில்லை. அதனைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா மீண்டும் களம் இறங்குவார் என தெரிவித்திருந்த நிலையில், காயம் இன்னும் முழுமையாக சரியாகததால் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்தும் விலகினார்.

அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களில் இருந்தும் வெளியேறினார்.

இந்த நிலையில் சமீபத்தில் நியூசிலாந்தில் ஜாஸ்பிரித் பும்ராவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் தற்போது ஓய்வில் உள்ளார். அதன் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஜாஸ்பிரிட் பும்ரா விலகியுள்ளார்.

இந்த நிலையில் நடப்பாண்டு காண மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ராவுக்கு பதிலாக சந்திப் வாரியர் சேர்க்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mumbai Indians Sandeep warrior replaces jasprit bumrah in IPL 2023


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->