உலகக்கோப்பை போட்டியில் ரி‌ஷப் பந்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் தேர்வு ஏன்? கோலி விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30 ஆம் தேதி முதல் ஜூலை 14 ஆம் தேதி வரையில் நடக்கிறது இந்த போட்டிக்காக 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் விக்கெட் கீப்பர் டோனி தொடர்பாக கடும் விமர்சனம் எழுந்தது. அதிரடி ஆட்டக்காரர் ரிசப் பந்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது தவறு என்று முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.

போட்டியின் அனுபவத்தின் அடிப்படையிலேயே தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்று தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே. பிரசாத் விளக்கம் அளித்திருந்தார் .

இந்த விவகாரம் குறித்து எந்த கருத்தும் கூறாமல் இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது மவுனத்தை கலைத்து உள்ளார். உலக கோப்பை போட்டியில் ரி‌ஷப் பந்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தது ஏன் என்பதற்கக்கான விளக்கத்தை கோலி அளித்துள்ளார் 

தினேஷ்கார்த்திக் உலக கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்ததற்கு அவரது அனுபவமே முக்கிய காரணம். நெருக்கடியான நேரத்திலும், இக்கட்டான சூழ்நிலையிலும் அமைதியாக இருந்து நிதானமாக ‘பேட்டிங்’ செய்யக்கூடிய தனித் திறமை கொண்டவர். இந்த ஒரு வி‌ஷயத்தை கிரிக்கெட் வாரியம் மற்றும் தேர்வு குழுவில் உள்ள அனைவரும் ஒப்புக்கொண்டனர். 

ஒருவேளை டோனி காயம் காரணமாக அவர் ஆட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் தினேஷ் கார்த்திக்கால் கீப்பிங் பணி மற்றும் பேட்மேன் பணியையும் சேர்த்து கவனிக்க முடியும், மேலும் தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யக்கூடிய சிறப்பான திறமையை பெற்றவர்.இதன் அடிப்படையிலே  தான் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

சென்னையை சேர்ந்த தினேஷ் கார்த்திக் டோனி வருவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பே சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனவர் 2004ல் அறிமுகமான தினேஷ் கார்த்திக்  2007 உலககோப்பை அணியில் இடம் பெற்றார். ஆனால் ஒரு ஆட்டத்தில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது 2 வது முறையாக உலககோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kohli tells reason to choose dinesh karthik


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->