#IPL2023 : கொல்கத்தா அணிக்கு பெரும் பின்னடைவு.. முக்கிய அதிரடி ஆல்ரவுண்டர் விலகல்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. அதன்படி கடந்த 2008 ஆம் ஆண்டு பிசிசிஐ தொடங்கிய ஐபிஎல் டி20 தொடர் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.

இந்த நிலையில் 16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. 

இந்த நிலையில் கொல்கத்தா அணியில் இருந்து வங்காளதேச அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன்  விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் வங்கதேச அணி வரும் மே 14ம் தேதி வரை அயர்லாந்து அணியுடன் விளையாட உள்ளது. அதன் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஷாகிப் அல் ஹசன் விலகியுள்ளார். ஏற்கனவே கொல்கத்தா அணியில் காயம் காரணமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KKR Shakib Al Hasan ruled out IPL 2023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->