நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரரால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இஷான் கிஷான்.. வெளியான பரபரப்பு வீடியோ.!! - Seithipunal
Seithipunal


இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்தது. 

 இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இந்திய பவுலர்கள் வீசிய பந்தை தாக்குப் பிடிக்காமல், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.  இறுதியில் தென்ஆப்பிரிக்கா அணி 140 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் 48 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இந்த போட்டியில் இஷாந்த் கிஷானுக்கு  கசப்பான அனுபவம் ஒன்று நடைபெற்றுள்ளது. ஆட்டத்தில் ஒன்பதாவது ஓவரில் தென்ஆப்பிரிக்கா வீரர் சாம்சி வீசிய 4-வது பந்தை இஷான் கிஷான் அட்டகாசமாக சிக்சர் அடித்தார். இதனால் சாம்சி வருத்தமடைந்தார். இதற்கு அடுத்த படத்தை இஷான் கிஷான் மிக வேகமாக அடித்தார். 

இதையடுத்து இஷான் கிஷானை சீண்டும் வகையில் சாம்சி ஏதோ கூறியது கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் கடுப்பான இஷான் கிஷான் உடனடியாக ஆக்ரோஷத்துடன் வாக்குவாதம் செய்தார். இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ishan kishan got into an argument with shamsi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->