இறுதிப்போட்டிக்கு தகுதி பெறப்போவது யார்.? பெங்களூரு-ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கான 2-வது தகுதி சுற்று போட்டியில் ராஜஸ்தான்-பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன.

15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் இரண்டு போட்டிகளில் சாம்பியன் யார் என்பது தெரிந்துவிடும். இதில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஏற்கனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டிக்கு முன்னேறும் இரண்டாவது அணி எது என்பதை நிர்ணயிக்கும் 2வது தகுதி சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலாவது தகுதி சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனாலும் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்திற்குள் இருந்ததால் இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2008ம் ஆண்டு அறிமுக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. அதன்பிறகு அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறவில்லை. 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் முனைப்புடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முனைப்பு காட்டி வருகிறது.

அதேபோல்புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்த பெங்களூரு அணி வெளியேற்றுதல் சுற்றில் பலம் வாய்ந்த லக்னோ அணியை வீழ்த்தியது. அதே உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை தோற்கடிக்க தயாராகி வருகிறது.

அதேபோல் பெங்களூர் அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. ஆனால் மூன்று முறை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று தோல்வி அடைந்துள்ளனர். நீண்டகால சோகத்தை தணிக்க இது அருமையான சந்தர்ப்பமாக அமையும்.

இவ்விரு அணிகளும் லீக் சுற்றுப்போட்டியில் பெங்களூரு 4 விக்கெட் வித்தியாசத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதவிருக்கும் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL qualifier 2 rajasthan royals vs banglore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->