ஐபிஎல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்..  ஐபிஎல் மினி ஏலம் நேரலையில் இலவசமாக பார்ப்பது எப்படி? - Seithipunal
Seithipunal


2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது.

இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த மூன்று சீசன்களாக ரசிகர்கள் அனுமதிக்கப்படாமல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில், கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் சீசனில் இந்தியாவில் நடந்தாலும் 4 மைதானங்களில் மட்டுமே நடத்தப்பட்டது.

மேலும், அடுத்த சீசனில் வழக்கம் போல சொந்த மற்றும் எதிரணி மைதானங்களில் லீக் போட்டிகள்  நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. அதேபோல் ஜியோ சினிமா செயலிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில் ஜியோ சினிமா செயலில் பார்ப்பதற்கு எந்தவித கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL mini auction telecast in Star sports and jio cinema


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->