இன்று ஐபிஎல் மினி ஏலம்.. அணிகளின் மீதமுள்ள தொகை எவ்வளவு.? எந்தெந்த வீரர்களுக்கு அதிக டிமாண்ட்? - Seithipunal
Seithipunal


2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் இன்று (டிசம்பர் 23ம் தேதி) கொச்சியில் நடைபெற உள்ளது.

இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் இன்று மதியம் 2.30 மணிக்கு (டிசம்பர் 23ஆம் தேதி) கொச்சியில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. அதேபோல் ஜியோ சினிமா செயலிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில் ஜியோ சினிமா செயலில் பார்ப்பதற்கு எந்தவித கட்டணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மினி ஏலத்தில் மொத்தம் 405 வீரர்கள் ஏலம் விடப்பட உள்ளனர். ஆனால் இதில் 87 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார். அதில் 30 இடங்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களுடையது. மீதி 57 இடங்களுக்கு மட்டுமே இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அணியில் மீதமுள்ள இடங்கள் மற்றும் மீதமுள்ள தொகை;

சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ 20.45 கோடி (9 இடங்கள்)
மும்பை இந்தியன்ஸ் - ரூ.20.55 கோடி (9 இடங்கள்)
குஜராத் டைட்டன்ஸ் - ரூ 19.25 கோடி (10 இடங்கள்)
டெல்லி கேபிடல்ஸ் - ரூ 19.45 கோடி (7 இடங்கள்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ 7.05 கோடி (14 இடங்கள்)
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ 23.35 கோடி (14 இடங்கள்)
பஞ்சாப் கிங்ஸ் - ரூ 32.2 கோடி (12 இடங்கள்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ 8.75 கோடி (9 இடங்கள்)
ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 13.2 கோடி (13 இடங்கள்)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ 42.25 கோடி (17 இடங்கள்)

இந்த நிலையில் இன்று நடைபெறும் ஏலத்தில் அதிரடி ஆல்ரவுண்டர்கள் நிறைய பேர் இடம் பெற்றுள்ளதால் இன்றைய ஏலத்தில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வெளிநாட்டு வீரர்களில் நட்சத்திர ஆல்ட்ரவுண்ட்ர்களான பென்ஸ் ஸ்டோக்ஸ், சாம் கரண், கேமரூன் கிரீன், சிக்கந்தர் ராசா, ஷகிப் அல்ஹாசன் அதிக தொகைக்கு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் இந்திய வீரர்களான மயங்க் அகர்வால், மணிஷ் பாண்டே, உனத் கட் எதிர்பார்க்கப்படும் வீரர்களாக உள்ளனர். இதில் இந்தியாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் ஜெகதீசனை எடுக்க கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL mini auction 2023 today


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->