#IPLAUCTION : ஜோசஃப்ரா ஆர்ச்சரை தட்டி தூக்கிய சாம்பியன் அணி.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


15வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் புதிதாக இணைந்துள்ளது. 

10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 25 வீரர்களை வைத்துக்கொள்ளலாம். அதன்படி, பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களை தேர்வு செய்ய ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்றும், இன்றும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பெங்களூருவில் 15வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் இன்று 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை ₹8 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

அதனைத்தொடர்ந்து இந்திய வீரர் ரிஷி தவான்  ₹55 லட்சத்துக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

மேற்கிந்திய தீவுகள் வீரர் ரோவ்மேன் பாவெல்  ₹2.80 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது.

நியூசிலாந்து வீரர் டேவோன் கான்வேவை ₹1 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலனை ₹80 லட்சத்துக்கு வாங்கியது RCB அணி!

இந்திய வீரர் சிமர்ஜீத் சிங்கை  ₹20 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது.

இந்திய வீரர் யாஷ் தயால்  ₹3.2 கோடிக்கு வாங்கியது குஜராத் டைட்டன்ஸ் அணி.

இந்திய வீரர் ராஜ்வர்தன்  ₹1.5 கோடிக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்திய வீரர் ராஜ் அங்கத் பாவா  ₹2 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

இந்திய வீரர் சஞ்சய் யாதவ்  ₹50 லட்சத்துக்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ்.

இந்திய கிரிக்கெட் வீரர் தர்ஷன் நல்கண்டே ₹20 லட்சத்துக்கு வாங்கியது குஜராத் டைடன்ஸ்.

இந்திய கிரிக்கெட் வீரர் அனுகுல் ராய்  ₹20 லட்சத்துக்கு வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

இந்திய கிரிக்கெட் வீரர் மஹிபால் லோம்ரோர் ₹95 லட்சத்துக்கு வாங்கியது ஆர்.சி.பி அணி.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஷெர்ஃபேன் ரூதர்போர்ட்  ₹1 கோடிக்கு வாங்கியது பெங்களூரு அணி.

ஆஸ்திரேலிய வீரர் டேனியல் சாம்ஸை ₹2.6 கோடிக்கு வாங்கியது மும்பை அணி.

நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னரை ₹1.9 கோடிக்கு வாங்கியது சென்னை அணி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL Mega Auction jofra Archer sold to Mumbai Indians


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->