#IPL2023 :  பெங்களூர் அணியில் இணைந்த முக்கிய வேகப்பந்து வீச்சாளர்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் பெங்களூர் அணி இதுவரை மூன்று லீக் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ஒரு போட்டியில் வெற்றி மற்றும் 2 போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் பெங்களூரு அணி 2 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் பெங்களூர் அணி நாளை 3.30 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.

இந்த நிலையில் காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் விளையாடாமல் ஓய்வெடுத்து வந்த ஜோஷ் ஹேசில்வுட் தற்போது முழு உடற்தகுதி பெற்றுள்ளார். இதனையடுத்து நாளை டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2024 Josh Hazelwood recovery from injury joined RCB


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->