இன்று கோலாகலமாக தொடங்கும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா.. அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. அதன்படி கடந்த 2008 ஆம் ஆண்டு பிசிசிஐ தொடங்கிய ஐபிஎல் டி20 தொடர் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.

இதனையடுத்து ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் கடந்த டிசம்பர் 25ம் தேதி கொச்சியில் நடைபெற்றது. இந்த நிலையில் 16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது.

அதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் தொடங்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில்  ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

கலை நிகழ்ச்சிகள்

2023 ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பல்வேறு நட்சத்திர கண்கவர் நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் கலந்து கொள்ள உள்ளனர். அதன்படி, ராஷ்மிகா மந்தனா, தமன்னா, கத்ரீனா கைஃப், டைகர் ஷெராஃப் மற்றும் அரிஜித் சிங் ஆகியோரின் நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகள்

இந்த நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர், டாஸ்ஸிற்கு பிறகு ப்ளேயிங் 11 வீரர்கள், ஓவரை முடிக்க காலக்கெடு, டெட்பால் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் நடைமுறைக்கு வர உள்ளது.

டாஸ்ஸிற்கு பிறகு ப்ளேயிங் 11 வீரர்கள்

2023 ஐபிஎல் சீசனில் டாஸ் போடப்பட்ட பிறகு அணிகளின் விளையாடும் 11 வீரர்களை அறிவிக்கலாம். இதன்மூலம் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு ஏற்ப அணி வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம்

இம்பேக்ட் பிளேயர்

இம்பேக்ட் பிளேயர் என்றால் போட்டி நடந்து கொண்டிருக்கும் போது விளையாடும் 11 வீரர்களில் ஒருவரை மாற்றிக்கொள்ள முடியும். அதன்படி 11 வீரர்களை அறிவிக்கும் போது மாற்று வீரரையும் (இம்பேக்ட் பிளேயர்) அறிவிக்க வேண்டும்.

மேலும் 14-வது ஓவர் முடியும் முன்பாக அணியின் ஒரு வீரரை மாற்றிக் கொள்ள முடியும் எனவும், அவர் பேட்டிங், பவுலிங் செய்யலாம். அதேபோல், அந்த இம்பேக்ட் வீரரை பேட்ஸ்மேனுக்கு பவுலராகவோ, இல்லை பவுலருக்கு பேட்ஸ்மேனாகவோ கூட மாற்றலாம். இதில் எந்த கட்டுப்பாடும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இம்பேக்ட் பிளேயர் இந்திய வீரர்களை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒருவேளை விளையாடும் 11 பேரில் வெளிநாட்டு வீரர்கள் 3 பேர் களமிறங்கினால் மட்டுமே வெளிநாட்டு வீரர்களை பயன்படுத்த முடியும்.

ஓவரை முடிக்க காலக்கெடு

குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை முடிக்கவில்லை என்றால் நேரம் முடிந்த பிறகு வீசும் ஓவர்களின் போது வட்டத்திற்கு வெளியே 4 ஃபீல்டர்கள் மட்டும்தான் இருக்க முடியும்.

டெட்பால்

பேட்டிங் செய்யும்போது பேட்ஸ்மனுக்கு தொந்தரவு கொடுத்து, வம்பு இழுத்தால் அந்தப் பந்தினை டெட்பால் எனக்கூறி 5 ரன்கள் பேட்டிங் அணிக்கு கொடுத்து விடுவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 season starts today


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->