#IPL2023 : சூர்யகுமார் யாதவ் மரண அடி.. பெங்களூரை வீழ்த்தி மும்பை அபார வெற்றி.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, மே 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டூப்பிளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பௌலிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய டூப்பிளஸிஸ் 65 ரன்களும், மேக்ஸ்வெல் 68 ரன்களும் குவித்தனர்.

அது தொடர்ந்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 83 ரன்களும், நேஹல் வதேரா 52 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 8வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 Mumbai Indians won by 6 wickets against banglore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->