#IPL2023 : குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு.. முக்கிய வீரர் விலகல்.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, மே 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ்  அணி இதுவரை 10 போட்டியில் விளையாடி உள்ள நிலையில் 7 போட்டியில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ்வா லிட்டில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அந்த வகையில் வங்கதேச அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜோஷ்வா லிட்டில் அயர்லாந்து செல்கிறார். இந்த தொடர் வரும் மே 9ம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஒரு நாள் தொடருக்கு பிறகு மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 Gujarat Titans joshuva little misses some IPL matches


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->