#IPL2023 : டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர்களின் விளையாட்டு பொருட்கள் திருட்டு.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதில் கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பெங்களூருவிடம் தோல்வி அடைந்தது. அதனைத்தொடர்ந்து நாளை கொல்கத்தா அணியுடன் மோதுகிறது.

இந்த நிலையில் டெல்லி கேப்பிடல் அணி வீரர்களின் பேட் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் பெங்களூரில் இருந்து டெல்லி விமான நிலையத்தில்  இறங்கிய பிறகு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உடைமைகளிலிருந்து அவர்களது பேட் மற்றும் மற்ற கிரிக்கெட் உபகரணங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் டெல்லி அணியின் டேவிட் வார்னர், பிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், யாஷ் துல் உள்ளிட்ட வீரர்களின் 16 லட்சம் மதிப்புள்ள பேட் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் திருடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 Delhi Capitals team bat and cricket kit robbery


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->