#IPL2023 : டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டன் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. அதன்படி கடந்த 2008 ஆம் ஆண்டு பிசிசிஐ தொடங்கிய ஐபிஎல் டி20 தொடர் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.

இதனையடுத்து ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் கடந்த டிசம்பர் 25ம் தேதி கொச்சியில் நடைபெற்றது. இந்த நிலையில் 16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில், மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 

இதனையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இதில், இந்திய கிரிக்கெட் வீரரும் டெல்லி கேப்டனுமான ரிஷப் பந்த் கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று தற்போது ஓய்வெடுத்து வருகிறார். அதன் காரணமாக அவர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து டெல்லி அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அணியை வழிநடத்துவார் என டெல்லி கேப்பிடல்ஸ் அணி அறிவித்துள்ளது. மேலும், துணை கேப்டனாக இந்திய வீரர் அக்ஸர் படேல் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஏற்கனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IPL 2023 Delhi Capitals captain Warner and vice captain Axar Patel


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->