#IPL2023 : ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா பெங்களூர்.? ஹைதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை.! - Seithipunal
Seithipunal


16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போதைய இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் இனிமேல் நடைபெறும் லீக் போட்டியும் மிகவும் முக்கியமாகும். இதில் தோல்வி அடையும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்.

அந்த வகையில் டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.

இந்த சீசனில் பெங்களூர் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

அதேபோல், 12 போட்டிகளில் விளையாடியுள்ள ஹைதராபாத் அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெறும் 64வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியும், பெங்களூர் அணியும் மோதுகின்றன.

பெங்களூர் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமென்றால் இன்றைய போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டும். ஆனால், பெங்களூர் அணி தோல்வி அடைந்தால் கடைசி லீக் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்று மற்ற போட்டிகளின் முடிவை பொறுத்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா என்பதை தெரியும்.

ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் கவலையில்லை. அதன் காரணமாக ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற பெங்களூர் அணி கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நேருக்கு நேர்

இவரு அணிகளும் இதுவரை 22 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12 போட்டிகளில் ஹைதராபாத் அணியும், 9 போட்டிகளில் பெங்களூர் அணியும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 64th match SRH vs RCB


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->