2022 ஐபிஎல் கிரிக்கெட் போட்டி.. பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் யார் தெரியுமா.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 14 வது சீசன் முடிந்த உடன் புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு, 15 வது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் களமிறக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்தது. இந்த புதிய 2 அணிகளை ஏலம் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. அதில் லக்னோ, அகமதாபாத் அணிகள் தேர்வு செய்யப்பட்டது. 

இந்த புதிய இரண்டு அணிகளுக்கு தரமான வீரர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, மெகா ஏலத்திற்கு முன்பு பழைய 8 அணிகளும் விதிமுறைக்கு உட்பட்டு 4 பேரை தக்க வைக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் வீரர்களை தக்க வைத்தனர். 

இந்த நிலையில் மற்ற வீரர்களுக்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 12, 13 தேதிகளில் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணிகளும் போட்டிபோட்டு தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்தனர்.

அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஷிகர் தவன் (8.25 கோடி), ஜானி பேர்ஸ்டோ (6.75 கோடி), காகிசோ ரபாடா (9.25 கோடி), ஷாருக்கான் (9 கோடி), ராகுல் சஹார் (6.25 கோடி), லியாம் லிவிங்ஸ்டன் (11.50 கோடி) என பல முன்னணி வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்த நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மாயாங்க் அகர்வால் வழிநடத்துவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2022 mayank Agarwal lead Punjab kings


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->