இந்தியா-இலங்கை டி20 தொடர்.. தொடரைக் கைப்பற்றிய இந்திய மகளிர் அணி.! - Seithipunal
Seithipunal


இந்தியா-இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

இதில், நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து இலங்கைஅணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian women's cricket team won't T20 series against srilanka


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->