உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தாக்கம் வென்ற இந்திய வீராங்கனை! - Seithipunal
Seithipunal


ஜெர்மனி தலைநகரம் பெர்லினில் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நேற்று நடந்த பெண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவின் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அதிதி சுவாமி (வயது 17) 149-147 என்ற புள்ளி கணக்கில் மெக்சிகோவின் ஆன்ட்ரியா பிசெர்ராவை வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றார்.

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற  சாதனையை மகாராஷ்டிராவை சேர்ந்த அதிதி படைத்துள்ளார்.

மேலும் சீனியர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இளம் வீராங்கனை என்ற பெருமையை சொந்தமாக்கிக் கொண்டார். அதிதி நடப்பு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற இரண்டாவது தங்க பதக்கம் ஆகும். 

காம்பவுண்ட் அணி பிரிவிலும் அவருக்கு தங்கம் கிடைத்தது. இதனை குறித்து அதிதி தெரிவிக்கையில், ''முதல் தங்கத்தை நமது நாட்டுக்காக வெல்ல வேண்டும் என்பதில் மட்டுமே  கவனமாக இருந்தேன். 

மற்றவை எல்லாம் எனது வழியில் அமைந்தது. இது தொடக்கம் தான். ஆசிய போட்டி அடுத்து வருகிறது. அதிலும் நம் நாட்டிற்காக தங்கப்பதக்கம் வெல்ல விரும்புகிறேன்'' என்று  தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian player win the World Archery Championship


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->