இந்தியா-அயர்லாந்து டி20 கிரிக்கெட் தொடர்.. முதலாவது டி20 போட்டியில் இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று நடக்கிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதனிடையே அயர்லாந்து அணிக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹர்திக் பாண்ட்யா தலைமையில் உருவாக்கப்பட்ட இரண்டாம்தர இந்திய அணி 2 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக மும்பையில் இருந்து அயர்லாந்துக்கு புறப்பட்டு சென்றது. இந்தியா - அயர்லாந்து எதிரான 20 ஓவர் டி20 போட்டி இன்றும், 28ஆம் தேதியும் நடைபெறுகிறது.

இதில், இன்று நடைபெறும் முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 9 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. அயர்லாந்து தொடரில் சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் இறங்குகின்றனர். இந்த தொடருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் செயல்படுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India vs Ireland T20 series 1st T20 match today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->