பதிலடி கொடுக்குமா இந்தியா.. இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் 2-வது டி20 போட்டி இன்று மோதல்.!
India vs Australia 2nd T20 match today
இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் 2ஆவது டி20 போட்டி நாக்பூரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை தக்கவைக்க இந்திய அணியும், அதேபோல் தொடரை வெல்ல ஆஸ்திரேலியா அணியும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்றைய போட்டியில் காயத்திலிருந்து மீண்ட ஜாஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவிற்கு பதிலாக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
India vs Australia 2nd T20 match today