வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி.? முதலாவது டி20 போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

அதன்படி, இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

ஆசிய கோப்பை தோல்விக்கு பிறகு இந்தியா விளையாடும் முதல் போட்டி இதுவாகும். மேலும், அடுத்த மாதம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்க உள்ள நிலையில் தங்களை தயார்படுத்திக் கொள்ள இந்த தொடர் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

உலக கோப்பைக்கு தயாராகும் இந்திய அணி தற்போது நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி உலக கோப்பைக்கு தயாராகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India vs Australia 1st T20 match today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->