குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், துவக்க மற்றும் கடைசி நாள் விழாவை இந்தியா புறக்கணிக்க முடிவு.! - Seithipunal
Seithipunal


சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் துவக்க நாள் மற்றும் கடைசி நாள் விழாவை புறக்கணிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீன தலைநகர் பீஜிங்கில் வரும் 4ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான தீப தொடர் ஓட்டம் துவங்கிய போது, எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய ராணுவ வீரர்களுடன் நடந்த மோதலில் காயமடைந்த சீன வீரர், தீபத்தை கையில் ஏந்தி பயணித்தார்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில், ஒலிம்பிக் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளிலும் அரசியல் செய்ய சீனா முயற்சி செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற நிகழ்வுகள் வருத்தம் அளிக்கிறது என்றும், இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் துவக்க நிகழ்ச்சி மற்றும் இறுதி நாள் விழாவில் இந்திய தூதரக அதிகாரிகள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India decides to boycott Olympics inaugural ceremony


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->