இந்தியா - ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் போட்டி.. இரு நாட்டு பிரதமர்கள் பங்கேற்பு.. ஏற்பாடுகள் தீவிரம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 9ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில்  இந்தியா - ஆஸ்திரேலியா அணிக்களுக்கு இடையேயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை இந்திய பிரதமர் மோடியும் - ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ்வும் நேரில் காண உள்ளதால் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய ஆஸ்திரேலியா உயர் ஆணையர், மார்ச் 8ம் தேதி கோலாகலமாக நடைபெறும் ஹோலி பண்டிகையில் கலந்து கொள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அகமதாபாத் வருகிறார்.

அதனைத் தொடர்ந்து இருநாட்டு பிரதமர்களும் நான்காவது டெஸ்ட் போட்டியை காண உள்ளனர். இதன் மூலம் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே வலுவான நட்புறவு உண்டாகும். மேலும் பிரதமர்கள் பரஸ்பரம் சுற்றுப்பயணம் செய்வதன் மூலம் இரு நாடுகளுக்கும் நிறைய நன்மைகள் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India and Australia prime minister watch 4th test IND vs AUS


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->