இந்தியா - இலங்கை 2வது டி20 போட்டி.. தொடரை வெல்லுமா இந்திய அணி? இந்தியா பௌலிங் தேர்வு! - Seithipunal
Seithipunal


இலங்கை அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது.

இதில், முதலில் நடைபெறும் டி20 தொடருக்கு இந்திய அணியில் ரோகித் சர்மா, கோலி, ராகுல் ஆகிய மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஹார்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாடுகிறது.

இதில், நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி கடைசி வரை போராடி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு புனேவில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் பாண்டியா பௌலிங் தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். அதேபோல் தொடரை சமன் செய்ய இலங்கை அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் நீக்கப்பட்டு ராகுல் திரிபாதி மற்றும் ஹர்ஸ்தீப் சிங் விளையாடுகின்றனர். இதில் ராகுல் திரிபாதி டி20 சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்;

இலங்கை அணி 11 வீரர்கள் : 

பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ்(வி.கீ), தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்னே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க

 இந்திய அணி 11 வீரர்கள் : 

இஷான் கிஷன்(w), சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா(கே), தீபக் ஹூடா, அக்சர் படேல், சிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs SL 2nd T20 india won the toss choose to bowl


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->