இந்திய அணி அபார பந்துவீச்சு.. இலங்கை ஆல் அவுட்.. எளிய இலக்கை எட்டுமா இந்திய அணி? - Seithipunal
Seithipunal


இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 216 ரன்களை இலக்காக இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, கோலி, ராகுல் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஹார்திக் பாண்டியா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாடியது.

இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது உள்ளது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய சஹாலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் விளையாடுகிறார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி 39.4 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து  215 ரன்கள் எடுத்துள்ளது.

 இந்திய அணியில் சிறப்பாக வீசிய முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அதனைத் தொடர்ந்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs SL 2nd ODI srilanka target of 216 runs


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->