INDvPAK : பாகிஸ்தான் ஆல்-அவுட் - செஞ்சுரி அடித்தால் செம்ம வெற்றி.! டார்கெட் பிக்ஸெடு.! - Seithipunal
Seithipunal


காமன்வெல்த் போட்டியில் இன்று (மகளிர்) "இந்தியா - பாகிஸ்தான்" அணிகளுக்கு இடையின டி20 ஆட்டம் தொடங்கி நடந்து வருகிறது. 

மழை காரணமாக ஆட்டம் தொடங்க தாமதம் ஏற்பட்டதால் 18 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மாற்றியமைக்கப்பட்டது. இதனையடுத்து டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 

தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய முனிபா அலி, ஒரு சிக்சர், 3 பவுண்டரி உட்பட 30 பந்துகளில், 32 ரன்களை சேர்த்து ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டக்-அவுட் ஆகி வெளியேறினார்.

ஒன்டவுன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பிஸ்மா மரூஃப் 17 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறி கொடுத்தார். 

ஒமைனா சோஹாலி, ஆயூஷா நசீம் தலா 10 ரன்களுக்கு  தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அலியா ரியாஸ் மட்டும் கடைசி கட்டத்தில் 18 ரன்கள் சேர்த்து நிதானம் காட்டினாலும், அவரும் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

அதன் பின்பு களம் இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழக்க, பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 99 ரன்களை சேர்த்தது.

இதனை அடுத்து இந்திய அணி 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி ஆட உள்ளது. 

இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ராதா யாதவ், சினேகா ரானா தலா இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind vs pak woman match


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->