வெற்றியுடன் தொடங்குமா இந்தியா? நாளை இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி.!
IND vs NZ 1st oneday match tomorrow
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
ஹார்திக் பாண்டியா மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில், முதலில் நடைபெற்ற ஹார்திக் பாண்டியா தலைமையிலான டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி டி20 தொடரை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. ஒருநாள் போட்டிகளுக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுகிறார்.
இந்த நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் நாளை காலை 7 மணிக்கு ஆக்லாந்து மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்திய அணியை பொறுத்தவரை கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணியை கொண்டு களமிறங்குகிறது.
ஒருநாள் தொடருக்கான அணி வீரர்கள்
நியூசிலாந்து அணி வீரர்கள் :
ஃபின் ஆலன், டெவன் கான்வே(w), கேன் வில்லியம்சன்(c), க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், லாக்கி பெர்குசன், டிம் சவுத்தி, ஆடம் மில்னே, மேட் ஹென்றி, டாம் லாதம்.
இந்திய அணி வீரர்கள் :
ஷிகர் தவான்(c), சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன்(w), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரிஷப் பந்த்.
இதுவரை நேருக்கு நேர்
இந்தியா நியூசிலாந்து அணிகள் இதுவரை 110 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 55 போட்டிகளில் இந்திய அணியும், 49 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் முடிவில்லை. ஒரே ஒரு போட்டி மட்டும் சமனில் முடிந்துள்ளது.
English Summary
IND vs NZ 1st oneday match tomorrow