பதிலடி கொடுக்குமா இந்தியா.. இன்று இந்தியா-வங்கதேசம் 2வது ஒருநாள் போட்டி.! - Seithipunal
Seithipunal


இந்தியா வங்காளதேசம் அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

நியூசிலாந்து தொடரில் விளையாட சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கின்றனர்.

இதில் முதல் போட்டியில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில் 2வது ஒருநாள் போட்டி இன்று காலை 11.30 மணி முதல் டாக்கா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று பதிலடி கொடுக்குமா? என ரசிகர்களால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், சொந்த மண்ணில் விளையாடும் வங்கதேச அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பில் விளையாடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருநாள் தொடருக்கான அணி விவரம்;

இந்திய அணி வீரர்கள் :

ரோஹித் சர்மா (கே), கே.எல். ராகுல் (து.கே), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ரிஷப் பந்த் (வி.கீ), இஷான் கிஷன் (வி.கீ, ஷாபாஸ் அகமது, அக்சர் படேல் , வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.

வங்கதேச அணி வீரர்கள் ;

அனாமுல் ஹக், லிட்டன் தாஸ்(c), ஷாகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், அபிஃப் ஹொசைன், மஹ்முதுல்லா, நூருல் ஹசன்(w), மெஹிதி ஹசன் மிராஸ், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், எபாடோட் ஹொசைன், யாசிர் அலி, நஜ்முல் ஹொஸ்கின் அலி, தசாயின்  நசும் அகமது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IND vs BAN 2nd oneday international match today


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->