இந்தியா-ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்.. தொடரை கைப்பற்றுமா இந்திய அணி? - Seithipunal
Seithipunal


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

அணியில் மாற்றம்

இன்றைய போட்டியில் இந்திய அணியில் கேஎல் ராகுலுக்கு பதிலாக இளம் வீரர் சுப்மன் கில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஆஸ்திரேலியா அணியில் கேப்டன் கம்மின்ஸ் சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், ஸ்டீவன் ஸ்மித் அணியை வழிநடத்துவார் என கூறப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் ஆகிய இருவரும் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

எதிர்பார்க்கப்படும் அணி விவரம்

எதிர்பார்க்கப்படும் இந்திய அணி 11 வீரர்கள்  :

ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில்/கே.எல். ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, கே.எஸ். பாரத் (வி.கீ), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ்.

எதிர்பார்க்கப்படும் ஆஸ்திரேலிய அணி 11 வீரர்கள் ;

உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித் (கே), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (வி.கீ), மிட்செல் ஸ்டார்க், டோட் மர்பி, நாதன் லியான், மேத்யூ குஹ்னெமன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs AUS 3rd Test match today starts


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->