இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி.. ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு.. இந்திய அணியில் 2 வீரர்கள் அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

நியூசிலாந்து அணியுடனான தொடரைத் தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட உள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று ( பிப்ரவரி 9 - 13) நாக்பூரில் தொடங்க உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இன்றைய போட்டியில் இந்திய அணியில் 2 வீரர்கள் அறிமுக வீரர்களாக டெஸ்ட் போட்டியில் களமிறங்குகின்றனர். அதன்படி, சூரிய குமார் யாதவ் மற்றும் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளது. அதன்படி முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் மோதுவதால் இந்த தொடர் விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை நேருக்கு நேர்

இதுவரை இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளும் இதுவரை 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், 43 போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியும், 30 போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது. 28 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. ஒரே ஒரு போட்டி முடிவில்லை.

அணி விவரம்:

ஆஸ்திரேலியா அணி 11 வீரர்கள் :

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், மாட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி(வி.கீ), பாட் கம்மின்ஸ்(கே), நாதன் லியான், டாட் மர்பி, ஸ்காட் போலண்ட்.

இந்திய அணி 11 வீரர்கள் :

ரோஹித் சர்மா(கே), கேஎல் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரீகர் பாரத்(வி.கீ), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs AUS 1st test match Australia won the toss choose bat


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->