#BREAKING || இந்திய-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட்: முதல்நாள் ஆட்டம் முடிந்தது.!  - Seithipunal
Seithipunal


இந்திய-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது. 

இந்த நிலையில், தொடரை வெல்வதற்கான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேஎல் ராகுல் 12 ரன்னுக்கும், மயங்க் அகர்வால் 15 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இதனைத்தொடர்ந்து புஜாராவுடன் கைகோர்த்த விராட் கோலி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாரா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்த போதிலும், விராட்கோலி அசத்தலான தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி 79 ரன்கள் குவித்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். குறிப்பாக ரிஷப் பண்ட் மட்டும் 27 ரன்கள் சேர்த்தார். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தனது முதல் இன்னிங்சில் 223 ரன்களை சேர்த்துள்ளது.

இதனை அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா அணி, ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 17 ரன்களை எடுத்துள்ளது. ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் எல்கர் 3 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

முதல் நாள் ஆட்டநேரம் முடிந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind v sa test match jan 11


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->