₹83 கோடி பரிசு யாருக்கு? 10 அணிகள் பங்கு பெறும் உலக கோப்பை திருவிழா இன்று தொடக்கம்! - Seithipunal
Seithipunal


ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கடந்த 2011ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் இன்று தொடங்குகிறது. இந்த தொடர் வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதிப் போட்டிகள் அதைதொடர்ந்து இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கும் உலகக் கோப்பை தொடரானது சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புனே, தர்மசாலா, லக்னோ உள்ளிட்ட 10 நகரங்களில் உள்ள மைதானங்களில் நடைபெற உள்ளது.

இந்தியாவில் இன்று தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழாவை கண்டு களிக்க உலகம் முழுவதிலும் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியாவில் குவிய தொடங்கியுள்ளனர். இந்த தொடரில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து மற்றும் தென்னாப்ரிக்கா என மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன.

ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாக திகழ்ந்த மேற்கிந்திய தீவுகள் அணி இந்த உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இன்று தொடங்கும் லீக் சுற்று போட்டிகள் ரவுண்ட் ராபின் முறையில் மற்ற 9 அணிகளுடன் தலா ஒரு முறை விளையாட உள்ளது. அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் பெரும்பாலான போட்டிகள் இந்திய நேரப்படி பிற்பகல் 2:00 மணிக்கு தொடங்குகின்றன. மேலும் 2 போட்டிகள் நடைபெறும் 4 நாட்களில்  முதல் போட்டி காலை 10.30 மணிக்கும், 2வது போட்டி 02:00 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டுகிறது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 33 கோடி ரூபாயாகும்.

இறுதிப்போட்டியில் தோல்வி அடையும் அணிக்கு 2 மில்லிய அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 16 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது. அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 6.65 கோடி ரூபாயும், நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறாத 6 அணிகளுக்கு தலா 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 83 லட்ச ரூபாயும், லீக் சுற்றில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு 40 ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 33 லட்ச ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் இந்த உலகக் கோப்பை தொடரில் பரிசு தொகையாக மட்டும் சுமார் 83 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Icc odi World cup 2023 begns today by eng vs nz match


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->