பாலின பாகுபாடு கிடையாது.. இனி "சமமான பரிசு" தொகை.. ஐசிசி எடுத்த அதிரடி முடிவு.!! - Seithipunal
Seithipunal


ஐசிசி வருடாந்திர கூட்டம் இன்று தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பனில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் தொடர்களில் வழங்கப்படும் பரிசுத்தொகை சமமான அளவில் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. 

வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு வழங்கப்படும் பரிசு தொகை முரண்பாட்டை சமநிலைக்கு கொண்டுவர ஐசிசி வருடாந்திர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே "கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணம் மற்றும் ஐசிசியில் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். உலகளாவிய நிகழ்வுகளுக்கு சமமான வெகுமதி அளிக்கப்படுகிறது

ஐசிசி உலகளாவிய வளர்ச்சி உத்தியுடன் இணைந்து அடுத்த 4 ஆண்டுகள் சுழற்சி முறையில் ஐசிசியின் ஒளிபரப்பு உரிமைகள் மற்றும் வணிகத் திட்டம வெற்றி பெற்றால் கிரிக்கெட் விளையாட்டில் முன்பை விட அதிக பணத்தை முதலீடு செய்ய முடியும். இதன் மூலம் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கிடையான பரிசுத்தொகை சமநிலை அடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC announced same prize money without gender discrimination


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->