அதிரடியாக ஆட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா! பிசிசிஐ திடீர் அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டியிலிருந்து இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டார்.

இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ள ஆஸ்திரேலியா அணி, 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. 

டி20 தொடருக்கான அணி மற்றும் முதல் இரு ஒருநாள் போட்டிக்கான அணி மற்றும் கடைசி மூன்று ஒருநாள் போட்டிக்கான அணி என மூன்று வீரர்கள் அடங்கிய பட்டியல் வெளியிட்டுள்ளனர். இதில் ஹர்திக் பாண்டியாவின் பெயர் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர் என ஆஸி முழுவதற்கும் ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்டு உள்ளார். ஆசியா கோப்பை தொடரின் போது அவரின் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 3 மாதங்களுக்கு மேல் விளையாடவில்லை. மீண்டும் அதே முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளதால் அவர் ஆஸி தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  

English Summary

hardik pandya ruled out australia match


கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
கருத்துக் கணிப்பு

கர்நாடக காவேரியில் தண்ணீர் திறப்பதன் காரணம்?
Seithipunal