ஐபிஎல் அணியின் ஆலோசகராக கவுதம் கம்பீர்.! எந்த அணிக்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிதாக தொடங்கப்பட உள்ள லக்னோ அணியின் ஆலோசகராக முன்னாள் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார்.


முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான கௌதம் கம்பீர் தற்போது கிழக்கு டெல்லி தொகுதியின் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். ஆனாலும் கூட தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியை பற்றிய விமர்சனங்களை வைத்து வருகிறார்.

மேலும், இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 50 ஓவர் உலகக் கோப்பை வெற்றி பெற முக்கியக் காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்க உள்ள லக்னோ அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர் 'மீண்டும் கிரிக்கெட்டில் இருப்பது பாக்கியம். வெற்றிக்கான நெருப்பு இன்னும் எனக்குள் பிரகாசமாக இருக்கிறது. ஒரு வெற்றியாளரின் மரபை விட்டுச் செல்லும் ஆசை என்னுள் இருக்கிறது' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Goutham Gambir Lucknow mentor


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->