இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியின் உத்தேச பட்டியல்.!! - Seithipunal
Seithipunal


ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடியது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் விளையாட உள்ளது. 

டி20 தொடரை இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் 17 வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்ற உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. இந்திய அணியில் பேட்டிங்கில் ரோகித் சர்மா, ஷிகர் தவான், சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹார்திக் பாண்டியா உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல் உள்ளனர். 

இந்திய அணியின் உத்தேச பட்டியல் :

ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர் அல்லது பிரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eng vs ind first one day match playing team


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->