ENG vs IND : டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் முக்கிய வீரர் இடம் பெறவில்லை.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. ஒரு போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஒரு போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. கடைசி போட்டியின் 5வது டெஸ்ட் போட்டி மழையின் காரணமாக இந்த வருடம் ஜூன் 1ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.

இதன்படி, இந்தியா - இங்கிலாந்து  இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில்  இன்று தொடங்குகிறது. 

இந்நிலையில், ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான டாசை இங்கிலாந்து அணி வெற்றி பெற்று, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய அணியில் அஸ்வின் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷர்துல் தாக்கூர் இடம் பெற்றுள்ளார்.

இந்திய அணி வீரர்களின் பட்டியல் :

சுப்மான் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா(கேப்டன்).

இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியல் :

அலெக்ஸ் லீஸ், சாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ்(கேப்டன்), சாம் பில்லிங்ஸ்(விக்கெட் கீப்பர்), மேத்யூ பாட்ஸ், ஸ்டூவர்ட் பிராட், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eng vs ind 5th test match eng opt to bowl


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->