7 பேர் விடுதலை தொடர்பாக சட்டமன்றத்தில் நடந்த கார சார விவாதம்!! - Seithipunal
Seithipunal


தி.மு.க சட்டமன்ற  உறுப்பினர் சுதர்சனத்தின்  7 பேர் விடுதலை தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இனிமேல் ஆளுநர் தான் முடிவெடுப்பார் என தெரிவித்தார். 

முதலமைச்சரின் பேச்சுக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்ற வாய்ப்பை நீதிமன்றம் கொடுத்துள்ளது, அந்த வாய்ப்பு திமுக ஆட்சிலிருக்கும் போது கிடைத்திருந்தால் உடனடியாக விடுதலை செய்திருப்போம் என தெரிவித்தார்.

துரைமுருகனின் பேச்சின் போது குறுக்கிட்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசு முடிவெடுக்கலாம் என சொன்னபிறகு,  உடனடியாக அமைச்சரவையில் 7 பேரையும் விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதகத் தெரிவித்தார். 

தீர்மானம் நிறைவேற்றிய பிறகு  ஆளுநரை நேரில் சந்தித்தோ, கடிதம் மூலமாகவோ அழுத்தம் கொடுத்தீர்களா? என  துரைமுருகன் கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய முதலமைச்சர் பழனிச்சாமி நளினியை மட்டும் விடுதலை செய்ய திமுக ஆட்சியில் முடிவு செயப்பட்டதாகவும், சட்டம், தண்டனை என்பது எல்லோருக்கும் பொதுவானது என பதிலளித்தார். மேலும்,ராஜிவ் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தன் வேலையை சரியாக செய்துவிட்டதாகவும், இனி ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk admk argument about seven tamilan realease


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->