இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி! 1000வது வெற்றியுடன் இறுதிப் போட்டியில் நுழைந்த ஜோகோவிச்.! - Seithipunal
Seithipunal


சர்வதேச தொடரான இத்தாலி ஓபன் டென்னிஸ் இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்காண அரையிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச், ஐந்தாம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார்.

விருவிருப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஜோகோவிச் ஆதிக்கம் செலுத்திய நிலையில் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சர்வதேச அரங்கில் தனது 1000வது வெற்றியை பதிவு செய்தார்.

சர்வதேச அரங்கில் 1000வது வெற்றியைப் பெற்ற ஐந்தாவது வீரர் என்ற சிறப்பை ஜோகோவிச் பெற்றுள்ளார்.

முதல் 4 இடங்களில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்மிகானர்ஸ் 1274, சுவிட்சர்லாந்தின் பெடரர் 1251, அமெரிக்காவின் இவான் லெண்டில் 1068, ஸ்பெயினின் ஜாம்பவான் நடால் 1051 வெற்றிகளுடன் உள்ளனர்.

மேலும் இன்று இரவு நடைபெறும் இத்தாலி ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஜோகோவிச், கிரீசின் சிட்சிபாசை எதிர்கொள்ள உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

djokovic entered Italy open tennis final


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->