WPL2023 : டெல்லி அணியில் மட்டும் 5 வெளிநாட்டு வீராங்கனைகள் விளையாடக் காரணம் என்ன?!  - Seithipunal
Seithipunal


மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் இரண்டாவது போட்டியானது மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 வெளிநாட்டு வீரர்களை களமிறக்கியது.

அமெரிக்காவைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான தாரா நோரிஸ், ஆஸ்திரேலியாவின் கேப்டன் மெக் லானிங், ஜெஸ் ஜோனாசென், தென்னாபிரிக்காவின் மரிசான் கேப், இங்கிலாந்தின் ஆலிஸ் கேப்சி ஆகிய ஐந்து வெளிநாட்டு வீராங்கனைகள் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டனர். 

ஆண்கள் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ஆடும் லெவனில் அதிகபட்சம் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டாலும், பெண்கள் போட்டியில் புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படியே ஒரு அணியில் அதிகபட்சமாக ஐந்து வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள், அவர்களில் நான்கு பேர் ஐசிசியின் முழு உறுப்பு நாடுகளிலிருந்தும், ஐந்தாவது நபர் ஐசிசியின் அசோசியேட் உறுப்பினர் நாட்டிலிருந்தும் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. 

Photo : தாரா நோரிஸ் 

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஏலத்தின் போது வேறு எந்த அணியும் ஒரு அசோசியேட் நாடுகளிலிருந்து வீரர்களை தேர்வு செய்யவில்லை.  இதன்மூலம் WPL 2023 சீசன் முழுவதும் ஒரு போட்டியின் போது ஐந்து வெளிநாட்டினரை களமிறக்கலாம் என்ற விதியின் பயனை டெல்லி கேபிட்டல்ஸ் அணியால் மட்டுமே அனுபவிக்க முடியும்.

இப்போட்டியில்  டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi capitals played with 5 foreigners in playing eleven at WPL2023


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->