#IPL2023 : தோனி CSK அணி நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. அதன்படி கடந்த 2008 ஆம் ஆண்டு பிசிசிஐ தொடங்கிய ஐபிஎல் டி20 தொடர் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளது.

இதனையடுத்து ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் கடந்த டிசம்பர் 25ம் தேதி கொச்சியில் நடைபெற்றது. இந்த நிலையில் 16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் மார்ச் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது.

அதன்படி இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் தொடங்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில்  ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில், இன்று அகமதாபாத்தில் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில், காயம் காரணமாக சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பங்கேற்க மாட்டார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று நடைபெறும் குஜராத் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி கட்டாயம் விளையாடுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ தெரிவித்துள்ளார். தற்போது இந்த செய்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CSK captain Ms dhoni confirm playing against Gujarat Titans


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->