தெருவில் பாணிப்பூரி விற்று உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்.! - Seithipunal
Seithipunal


உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 17வயது கிரிக்கெட் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் (Yashasvi Jaiswal) , இவர் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான (UNDER 19) உலககோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் சிறு வயது முதலே, கிரிக்கெட் மீது  கொண்ட ஆர்வத்தால் தனது 11 வயதிலே மும்பை வந்து மும்பையில் உள்ள தெருக்களில் பாணிப்பூரி விற்று, அதிலிருந்து கிடைத்த வருமானத்தை வைத்து கிரிக்கெட் பயிற்சி பெற்றார்.

உள்ளூரில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் யஷஸ்வி ஜெய்ஷ்வால் மிக சிறப்பாக விளையாடியதால் உலககோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த உலக்கோப்பை தொடர் வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தென் ஆப்ரிக்காவில் நடைபெறவுள்ளது.

சில மாதங்களுக்கு முன் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே டிராஃபியில் அதிக ரன் குவித்தது இவர் தான்.  யஷஸ்வி ஜெய்ஸ்வால் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த உலகின் இளைய பேட்ஸ்மேன் என்ற வரலாற்றை சாதனையையும் படைத்துள்ளார். 

இந்த சாதனைகள் மட்டுமில்லாமல் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த ஏழாவது இந்திய கிரிக்கெட் வீரராகவும் யஷஸ்வி திகழ்கிறார். பட்டியல் ஏ கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த மற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், ரோஹித் ஷர்மா (மூன்று முறை), ஷிகர் தவான், கே.வி.க கவுசல் மற்றும் சஞ்சு சாம்சன் பட்டியலில் விஜய் ஹசாரேவும் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cricket player yashasvi jaiswal life story


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->